#Agnipath:அக்னிபத் ஆட்சேர்ப்பு திட்டம் – விவரங்களை வெளியிட்ட இந்திய விமானப்படை!

Default Image

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு.முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில்,இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 17.5 அதிகபட்சமாக 23-ஆக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்,மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,ஜம்மு காஷ்மீர்,டெல்லி,அரியானா,உத்தர பிரதேசம்,பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில்,அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டங்களுக்கு மத்தியில்,இத்திட்டத்தின்கீழ் துணை ராணுவத்தில் சேரும் அக்னிபத் வீரர்களுக்கு மத்திய ஆயுதப்படை,அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில்,அக்னிபத் ஆட்சேர்ப்பு திட்டம் பற்றிய விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.அதன்படி,இந்திய விமானப்படையால் வெளியிடப்பட்ட விரிவான விவரங்கலானது,அக்னிபத் திட்டத்தின் ஆட்சேர்ப்பு தகுதிக்கான அளவுகோல்கள்,தேர்வு செயல்முறை மற்றும் பலன்கள் உட்பட திட்டத்தின் பல்வேறு அம்சங்களைக் குறிப்பிடுகிறது.

அதன்படி,அக்னிபத் ஆட்சேர்ப்பு செயல்முறை 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பொருந்தும் என்பதால்,விண்ணப்பப் படிவத்தில் சிறார்களின் பெற்றோர் கையொப்பமிட வேண்டும் எனவும், மேலும்,இத்திட்டத்தின் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முறையாக ஏற்று அக்னிவீரர்களும் ஆவணத்தில் கையொப்பமிடப்பட வேண்டும் என்றும் என்று IAF ஆவணம் தெரிவித்துள்ளது.

IAF அக்னிவீர்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இங்கே உள்ளன:

  • பணியின் போது IAF அக்னிவீரர்கள் தங்கள் சீருடையில் ஒரு தனித்துவமான அடையாளத்தை அணிவார்கள்.
  • அக்னிவீரர்கள் கௌரவம் மற்றும் விருதுகளுக்கு தகுதியுடையவர்கள்.
  • IAF ஆனது அக்னிவீரர்களின் மையப்படுத்தப்பட்ட உயர்தர ஆன்லைன் தரவுத்தளத்தை பராமரிக்கும்.அதில்,அக்னிவீரர்களால் அடையப்பட்ட திறன்கள் பதிவு செய்யப்பட்டு மதிப்பிடப்படும்.
  • இந்திய விமானப்படை அக்னிவீரர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் விடுமுறை மற்றும் மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் பிற நோய்வாய்ப்பட்ட விடுமுறை கிடைக்கும்.
  • தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் தவிர,நான்கு ஆண்டுகள் முடிவதற்குள் அக்னிவீரர்கள் அவர்களின் சொந்த கோரிக்கையின் பேரில் பணியில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள்.
  • இந்த திட்டத்தில் அக்னிவீரர்களுக்கு ஊதியமாக முதல் வருடத்தில் மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.பின்னர்,அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிப்புடன் கூடுதலாக,ஆபத்து மற்றும் சிரமம், உடை மற்றும் பயண கொடுப்பனவுகள்(allowances) வழங்கப்படும்.
  • ஒவ்வொரு அக்னிவீரரும் தனது மாத வருமானத்தில் 30% ‘அக்னிவீர் கார்பஸ் ஃபண்டுக்கு’ அளிக்க வேண்டும்.நிதியில் திரட்டப்பட்ட தொகைக்கு அரசு பொது வருங்கால வைப்பு நிதிக்கு இணையான வட்டி விகிதத்தை வழங்கும்.
  • நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தவுடன்,அக்னிவீரர்கள் ‘சேவா நிதி’ தொகுப்பைப் பெறத் தகுதி பெறுவார்கள்.அதில் அவர்களின் பங்களிப்பு (அக்னிவீரர் கார்பஸ் நிதியில்) மற்றும் அரசாங்கத்தின் பங்களிப்பு மற்றும் திரட்டப்பட்ட தொகைக்கான வட்டி ஆகியவை அடங்கும்.
  • அரசின் எந்தவொரு வருங்கால வைப்பு நிதியிலும் அக்னிவேயர்கள் பங்களிக்கத் தேவையில்லை.
  • அக்னிவீரர்களுக்கு எந்த வகையான ஓய்வூதிய பலன்களும் கிடையாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்