கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி -5 ஏவுகணை சோதனை வெற்றி.
ஒடிசாவில் உள்ள பாலசோர் கடற்கரை அருகே அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அணு ஆயுதங்களை தாங்கி சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் அக்னி-5 ஏவுகணை. 5,000 கிமீ தூரம் வரை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட அக்னி-5 ஏவுகணை.
கடந்த 1989-ம் ஆண்டில் அக்னி 1 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதன்பின், அக்னி 2, 3, 4, 5 ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. கடந்த 2012, 2013, 2015-ம் ஆண்டுகளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்த நிலையில், ஒடிசாவில் நேற்றிரவு மீண்டும் அக்னி 5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் அக்னி 5 ஏவுகணை 5,500 கி.மீ. தொலைவு சீறிப் பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கி தகர்த்தது. 17.5 மீட்டர் நீளம், 2 மீட்டர் விட்டம் கொண்ட அக்னி 5 ஏவுகணை 50,000 கிலோ எடை கொண்டதாகும். மணிக்கு 29,401 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும். 1,100 கிலோ எடை வரையிலான அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…