அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி!

Default Image

அக்னி-1 ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட  ராணுவத்தின் சார்பில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிசாவின் பலாசூரில் ((Balasore)) அப்துல் கலாம் தீவிலிருந்து காலை 8.30 மணிக்கு இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 15 மீட்டர் நீளம் கொண்ட அக்னி-1 ஏவுகணை 12 டன் எடை கொண்டதாகும். 1000 கிலோ வரை எடையை சுமந்து செல்லும்.

தரையிலிருந்து 700 முதல் 900 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும். ராணுவத்தில் 2004ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட அக்னி-1 வழக்கமான பயிற்சி நடவடிக்கையாக தற்போது சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

உயர்துல்லியத்துடன் இலக்கை தாக்கி அழிக்கும் திறன்கொண்ட அக்னி-1 ஏவுகணையை எந்த நேரத்திலும் பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதற்கான ராணுவத்தின் ஆயத்தநிலையை இந்த சோதனை உறுதிப்படுத்தியிருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi