மத்திய அரசு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனை செய்வதற்கான வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தயாரித்துள்ளது.
மத்திய அரசு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனை செய்வதற்கான வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தயாரித்துள்ளது. இதற்காக சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் திருத்த சட்டம் 2020 அரசாங்கம் வரைவு மசோதா தயார் செய்துள்ளது. இது விரைவில் சட்டம் ஆகும் என கூறப்படுகிறது.
இந்த மசோதா சிகரெட் மற்றும் புகையிலை தயாரிப்புகளுக்கான 2003ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு நபரும் சிகரெட் அல்லது வேறு எந்த புகையிலை பொருட்களையும் 21 வயதுக்கு கீழே உள்ள நபர்களுக்கும், கல்வி நிறுவனத்தில் 100 மீட்டர் சுற்றளவில் எந்தப் பகுதியிலும் விற்கவோ, விற்பனை செய்யவோ அனுமதிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்தால், அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் வரை அபராதம் மற்றும் இரண்டாவது முறையும் இந்த தவறை செய்தால், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சட்டவிரோத சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் இந்த மசோதாவில் ஒரு விதி உள்ளது.
அதன்படி சட்டவிரோத தயாரிப்புகளை விற்பனை செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும், இரண்டாவது முறை அதே தவறை செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட இடங்களில் புகை பிடிப்பதற்கு அபராதம் ரூ.200 இல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…