கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ் – பீதியில் மக்கள்!
கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் நிபா வைரசானது வேகமாக பரவி வருகிறது. நிபா வைரஸ் என்பது வௌவால்களின் எச்சங்கள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோயாகும். இந்த வைரஸ் தாக்குதலால் கடந்த வருடம் நிபா வைரஸ் 13 பேர் வரை உயிரிழந்தனர்.மேலும், 80 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும்,மாநிலம் முழுவதும் இதுவரை 5 க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அவர்கள் கூறுகையில், மாநிலம் முழுவதும் வைரஸ் பரவாமல் இருப்பதற்கு அரசு தீவிரமாக செயல்படுவதாகவும் ,மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.