மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் நௌக்ரி, 99 ஏக்கர் ஆப்..!
Naukri: கூகுள் ப்ளே ஸ்டோர் இந்தியாவில் பிரபலமான ஆப்களுக்கு கூகுள் பில்லிங் முறையை (ஜிபிபிஎஸ்) காரணம் காட்டி நேற்று நீக்கியது. அதன்படி 99 ஏக்கர் , பாரத் மேட்ரிமோனி, ஷாதி.காம், நௌக்ரி.காம் உள்ளிட்ட 10 இந்திய ஆப்களை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளது. கடந்த வாரம், பில்லிங் விதிகளுக்கு இணங்குவது குறித்து கூகுள் சில ஆப்ஸை எச்சரித்தது.
READ MORE- பாரத் மேட்ரிமோனி, ஷாதி உள்ளிட்ட பிரபலமான 10 இந்திய ஆப்ஸ்களை அதிரடியாக நீக்கும் கூகுள்
கூகுள் தனது பதிவில் கூகுள் பிளே ஸ்டோரில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய ஆப் டெவலப்பர்கள் இருப்பதாகவும், அவர்கள் அதன் பில்லிங் கொள்கையை பின்பற்றுவதாகவும், ஆனால் இந்த பத்து ஆப்ஸ் மட்டும் கூகுள் பிளே ஸ்டோரில் பணம் செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளது.
அதன் பிறகு நேற்று கூகுள் இந்த ஆப்களை எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. சில பயனர்கள் பிளே ஸ்டோரில் இருந்து சில ஆப்ஸைப் பதிவிறக்க முயன்றனர், ஆனால் அவர்களால் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.
READ MORE- தயவு செய்து இனி அதை செய்யாதீங்க… தங்கள் பயனர்களை எச்சரிக்கும் ஆப்பிள்!
இந்நிலையில், இன்று 99 ஏக்கர், நௌக்ரி, இன்ஃபோ எட்ஜ் போன்ற சில ஆப் மீண்டும் பிளே ஸ்டோரில் வந்துள்ளது. நௌக்ரி, 99 ஏக்கர் மற்றும் ஷிக்ஷா, இன்ஃபோ எட்ஜின் ஆகியவற்றை இனிமேல் வழக்கம் போல கூகுளின் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம்.