டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமைசட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . கடந்த மாதத்தில் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர் .
நேற்று பேராசிரியர்கள் சங்கம் சார்பாக பல்கலைக்கழகத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் .இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது முகமூடி கட்டிக் கொண்டு வந்த சிலர் கடுமையான ஆயுதங்களை வைத்துக் கொண்டு தாக்கியுள்ளனர் . இதில் இடதுசாரி மாணவர் அமைப்பின் தலைவர் ஐசே கோஸ் கடுமையாக தாக்கப்பட்டு மண்டை உடைந்தது.
இந்த தாக்குதலுக்கு ஆர்எஸ்எஸ் சார்பு ஏபிவிபி மாணவர் அமைப்பு இருப்பதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.அந்த முகமூடி அணிந்த கும்பல் வளாகத்திற்குள் இரவு 9 மணி வரை சுற்றித்திருந்துள்ளனர் .அவர்கள் கையில் ஹாக்கி மட்டை ,இரும்பு கம்பி செங்கல்களை கொண்டு கண்ணில் படும் பொருட்கள் அடித்து விடுதியை சூறையாடியுள்ளனர்.
இந்த தாக்குதலில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர் காயமைடந்த 28-க்கும் மேற்பட்டவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இந்த தாக்குதலுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் டெல்லி காவல் தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜே.என்.யு பல்கலை கழத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…