இந்தியாவில் 97 நாட்களுக்குப் பிறகு 300 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டு உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தீவிரமாக பரவ தொடங்கிய நிலையில் கோடிக்கணக்கான மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளிலும் அந்தந்த நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பலருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் தற்பொழுது வரை நடைமுறையில் உள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்த நிலையில் தற்பொழுது தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 97 நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் 334 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,686 ஆக பதிவாகியுள்ளது. தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,775 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,54,035 ஆக பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…