பெங்களூருவில் அதிகரிக்கும் கொரோனா.! பொதுமுடக்கம் பிறப்பித்த முதல்வர்.!
பெங்களூருவின் முக்கிய பகுதிகளான கே.ஆர்.சந்தை, வி.வி.புரம், சித்தாபுரா, கலாசிபல்யாஆகிய பகுதிகளில் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் தற்போது கொரானாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் பெங்களூருவில் தொற்று அதிகளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதன்பின்னர் பெங்களூருவின் முக்கிய பகுதிகளான கே.ஆர்.சந்தை, வி.வி.புரம், சித்தாபுரா, கலாசிபல்யாஆகிய பகுதிகளில் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிக அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறதாம்.
ஜூன் 14ஆம் தேதி நிலவரப்படி, பெங்களூருவில் 690ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த ஜூன் 21 அன்று நிலவரப்படி 1,272-ஆக உயர்ந்துள்ளது. இதன்காரணமாகவே தற்போது 14 நாட்களுக்கு முழுபொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.