சரிசெய்யப்பட்ட இயந்திர தொழில்நுட்ப கோளாறு – வாக்களித்தார் மிசோரம் முதல்வர் சோரம் தங்கா..!
இன்று சதீஸ்க்கரில் முதற்கட்ட தேர்தலும், மிசோராமில் ஒரேகட்டமாகவும் தேர்தல் நடைபெற்று வருகிறது. மிசோரத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. 40 சட்டப்பேரவை தொகுதிகளில் 1276 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் 8.52 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மிசோரமில் 3 ஆயிரம் போலீசாருடன் மத்திய ஆயுதப்படையை சேர்ந்த 450 குழுக்களும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மிசோரமில் வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்ற அம்மாநில முதலமைச்சர் சோரம் தங்கா வாக்களிக்காமல் திரும்பியுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்களிக்க முடியாமல் திரும்பியுளளார்.
அய்ஸ்வால் வடக்கு-2 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அய்ஸ்வால் வெண்கலை-1 பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக அவர் சென்ற நிலையில் வாக்களிக்காமல் திரும்பினார். இந்த நிலையில், தற்போது இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு நிலையில், தற்போது முதலமைச்சர் சோரம் தங்கா தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.