மே 26 ஆம் தேதி வானில் நிகழவுள்ள அதிசயம்..!
மே 26 ஆம் தேதி சந்திர கிரகணத்திற்கு பின்பு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளுக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்திர கிரகணம் என்பது சூரியன்,பூமி,சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்ற ஒரு நிகழ்வாகும்.அந்தவகையில்,இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணமானது வருகின்ற மே 26 ஆம் தேதி அன்று பிற்பகல் 3.15 மணியில் இருந்து மாலை 6.22 மணி வரை வானில் தோன்றும் எனவும், மேலும்,கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்,மிக நீண்ட சந்திர கிரகணமாக இருக்கும் இந்த கிரகணத்தை, இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே காண முடியும்.
இந்த கிரகணத்தின் போது நிலவானது அடர்த்தியான சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும்.மேலும்,முழு நிலவு பூமியின் நிழலுக்குள் நுழையும் போது,அது பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும்.ஏனெனில் பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் போது வளிமண்டல ஒளிச் சிதறல் ஏற்படும்.இதன் காரணமாகவே நிலவின் நிறம் ரத்தச் சிவப்பாக மாறும்.இதனை ஆங்கிலத்தில் “Blood Moon” என்று அழைக்கின்றனர்.
இதனால்,2021 ஆம் ஆண்டின் வானியல் அதிசயமாக இந்த சந்திர கிரகணம் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.