முதல் நாளே ஓம் பிர்லா செய்த செயல்.! ஒத்திவைக்கப்பட்ட மக்களவை.! 

Lok sabha Speaker Om Birla

டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் இன்று ஓம் பிர்லா புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட அவருக்கு பிரதமர் மோடி , எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட அவசரகால (எமெர்ஜென்சி) நிலை பற்றி குறிப்பிட்டு கண்டனங்களை பதிவு செய்தார்.

அவர் மேலும் கூறுகையில், 1975ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை முடிவை இந்த அவை வன்மையாகக் கண்டிக்கிறது. எமர்ஜென்சியை எதிர்த்து, போராடிய அனைவரின் உறுதியையும் நாங்கள் பாராட்டுகிறோம். 25 ஜூன் 1975 இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு தினம்.

இந்நாளில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை விதித்தார். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுத்தினார். இந்தியாவில் ஜனநாயக எப்போதும் பாதுகாக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட இந்தியாவில் இந்திரா காந்தியால் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. இந்தியாவில் ஜனநாயகம் நசுக்கப்பட்டது, கருத்துச் சுதந்திரம் கழுத்தறுக்கப்பட்டது என தனது கண்டனங்களை பதிவு செய்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.

இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள், சபாநாயகர் பேசியதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டனர். எதிர்கட்சியினர்களின் தொடர் அமளி காரணமாக, சபாநாயகராக ஓம் பிர்லா பதவியேற்ற முதல் நாளன்றே, மக்களவை நாளை வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக நேற்று முன்தினம் பிரதமர் மோடியும் எமர்ஜென்சி குறித்து தனது கண்டனங்களை பதிவு செய்து இருந்தார். அதற்க்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்னும் எத்தனை நாட்கள் எமர்ஜென்சியை பேசி ஆட்சி நடத்த போகிறார்கள் என விமர்சனம் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்