தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. நிரவ் மோடியை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுவர்கள்:குலாம் நபி குற்றச்சாட்டு
- பா.ஜ.க. வினர் நிரவ் மோடி வெளிநாடு தப்பி செல்லவும் உதவினர்.
- தற்பொழுது மீண்டும் இந்தியாவுக்கு நிரவ் மோடியை கொண்டு வருகின்றனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு இந்தியாவை விட்டு வெளியேறிய நிரவ் மோடி மீது ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்து உள்ளனர்.சில நாட்களுக்கு முன் லண்டனில் நிரவ் மோடி வசித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய கடந்த 18-ம் தேதி வாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.இதனை தொடர்ந்து லண்டன் போலீசார் நிரவ் மோடியை கைது செய்தனர்.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத் கூறுகையில் பா.ஜ.க. வினர் நிரவ் மோடி வெளிநாடு தப்பி செல்லவும் உதவினர் எனவும் , தற்பொழுது மீண்டும் இந்தியாவுக்கு நிரவ் மோடியை கொண்டு வருகின்றனர்.
தேர்தலுக்காக நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வருகின்றனர். தேர்தல் முடிந்தபின் நிரவ் மோடியை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுவர்கள் என கூறியுள்ளார்.