சபரிமலை விசாரணை நிறைவடைந்த பிறகே, சி.ஏ.ஏ குறித்து விசாரணை – உச்ச நீதிமன்றம்
சபரிமலை விவகாரம் தொடர்பான விசாரணை நிறைவடைந்த பிறகே, சி.ஏ.ஏ குறித்து விசாரணை நடக்கும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார். பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைக்கு தேதி முடிவு செய்ய கபில் சிபல் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலின் கோரிக்கையை நிராகரித்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. இதையடுத்து சபரிமலை தொடர்பான வழக்கு மார்ச் 16ம் தேதி தொடங்குகிறது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.