காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு -சரத்பவார்..!

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் என சரத்பவார் கூறியுள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியினருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் சந்தித்து பேச உள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. அம்மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜக 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
பாஜக 105 இடங்களிலும் , சிவசேனா கட்சி 56 இடங்களிலும் ,மற்றும் தேசியவாத கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.கூட்டணிக்கட்சிகளான சிவசேனா மற்றும் பாஜக இடையே ஆட்சி பங்கீட்டில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
வாக்குறுதியை காப்பாற்ற தவறினால் பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதில் அர்த்தமில்லை என சிவசேனா கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025