டெல்லியில் பல மருத்துவமனை தேடல்களுக்கு பின், உயிரிழந்த சமூக ஆர்வலர் அம்பரீஷ் ராய்!

டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப் படாததால் இறுதி நேரத்தில் சிகிச்சை பெற்று உயிரிழந்த சமூக ஆர்வலர் அம்பரீஷ் ராய்.
கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக நாடு முழுவதும் குறைவால் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் பலியாகி கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் ஒருபுறமிருக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஒருபுறம் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக தலைநகர் டெல்லியில் உள்ள நோயாளிகள் மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி வழிவதால் மருத்துவமனையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.
ஆக்சிஜன் வசதிகள் இன்றி பல மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் நோயாளிகள் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்து லக்னோ பல்கலைக்கழகத்தில் படித்து ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் பணியாற்றி வந்தவர் தான் அம்பரீஷ் ராய். இவர் ஒரு சமூக ஆர்வலராகவும் இருந்து வந்த நிலையில் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக காய்ச்சல் இருப்பதாக டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு கொரோனா இருப்பது அப்போது கண்டறியப்படாததால் சாதாரண வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக கூறி கொரோன வார்டுக்கு மாற்ற முயற்சித்தாலும் அந்த மருத்துவமனையில் கொரோனா வார்டில் படுக்கையறை இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலமாக மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஆனால் பல மருத்துவமனையிலும் இவருக்கு தொற்று உள்ளது என்று உறுதி செய்யப்படவில்லை என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பல மணி நேர போராட்டத்துக்கு பின்பதாக டெல்லியில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் பல மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்பட்ட பின்பு பல மணி நேரங்கள் சுற்றி திரிந்தால் ராய்க்கு அம்பேத்கர் மருத்துவமனையில் கடைசி நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அவரால் உயிர் பிழைக்க முடியவில்லை, இறுதியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
March 21, 2025
“குரல்கள் நசுக்கப்படும்., ஜனநாயகத்திற்கு மதிப்பே இருக்காது!” மு.க.ஸ்டாலின் பரபரப்பு வீடியோ!
March 21, 2025
சற்று குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
March 21, 2025
“ஆடையை களைவது பாலியல் வன்கொடுமை அல்ல” அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு.!
March 21, 2025