கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் பெரும் நிலச்சரிவு.!
கர்நாடகா : கேரளாவில் பெய்துவரும் கனமழையால், வயநாடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், அம்மாநிலத்தில் இன்றும், நாளையும் (ஜூலை 30) துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளாவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஹொசன் மாவட்டத்தில் மங்களூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
ஷீரடி கட் சக்லேஷ்பூர் டோடோ என்ற பகுதியில் நிகழ்ந்த இந்த நிலச்சரிவால், ஏராளமான வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனையடுத்து, ஜேசிபி இயந்திரங்களை கொண்டு சாலையில் சரிந்துள்ள பாறைகள், மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது.