பாஜகவில் இணைந்த பின், ஆந்திர முன்னாள் முதல்வர்-ஜே.பி.நட்டா சந்திப்பு.!
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி, இன்று பாஜகவில் இணைந்த பிறகு தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார்.
ஆந்திரா மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பாக கடைசி முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த கிரண்குமார் ரெட்டி. இவர் கடந்த மார்ச் 13, 2023 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். இன்று பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கிரண்குமார் ரெட்டி, பாஜகவில் இணைந்தார்.
பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த கிரண்குமார் ரெட்டி, ஆந்திராவை பிரிக்கும் காங்கிரஸ் கட்சியின் முடிவை எதிர்த்து மார்ச் 10, 2014 அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார், அதன்பிறகு 2018இல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த பிறகு மீண்டும் காங்கிரஸில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாஜகவில் இணைந்த கிரண்குமார் ரெட்டி, இன்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துள்ளார்.