ஜியோ, ஏர்டெலை அடுத்து ரீசார்ஜ் விலையை ஏற்றிய வோடஃபோன்.! எவ்வளவு தெரியுமா.?

Airtel - VI - Jio

VI : தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது தங்கள் சேவை கட்டணங்களை அடுத்தடுத்து அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். இதில் இந்தியாவில் தோலைதொடர்பு சேவையில் முதன்மையில் இருக்கும் ஜியோ நிறுவனம் நேற்று முன்தினம் முதலில் தங்கள் ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டது.

ஜியோ :

ஜியோ தனது ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 12 சதவீதம் முதல் 27 சதவீதம் வரையில் அதிகரித்து அறிவிப்பபை வெளியிட்டது. இந்த விலையேற்றம் ஜூலை முதல் அமலுக்கு வரும் என கூறியது.

ஏர்டெல் :

அதே போல, ஏர்டெல் நிறுவனமும், தங்கள் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு கட்டணங்களை 11 சதவீதம் முதல் 21 சதவீதம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இந்த கட்டண உயர்வு வரும் ஜூலை 3 முதல் அமலுக்கு வரும் என கூறியது.

வோடஃபோன் (VI) :

அதே போல, வோடஃபோன், ஐடியா நிறுவனமான VI நிறுவனமும் விலையேற்றத்தை அறிவித்துள்ளது. அடுத்தடுத்த காலாண்டுகளில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையில் கவனம் செலுத்தவும் உள்ளது என அறிவித்துள்ளது.  இந்த விலையேற்றம் ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.

சில புதிய கட்டண விவரங்கள் :

புதியதாக விலையேற்றம் செய்யப்பட்டுள்ள பிளான்களின் மிக முக்கியமாக, 28 நாட்களுக்கான ரீசார்ஜ் பிளான் 179 ரூபாயில் இருந்து 199 ரூபாயாகவும், 84 நாட்களுக்கான ரீசார்ஜ் கட்டணம் 459 ரூபாயில் இருந்து 509 ரூபாயாகவும், 365 நாட்களுக்கான ரீசார்ஜ் கட்டணம் 1,799 ரூபாயில் இருந்து 1,999 ரூபாயாகவும் உயரத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒரு நாளைக்கு 1 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் கட்டணம் 19 ரூபாயில் இருந்து 22 ரூபாயாகவும், 3 நாள் 6 ஜிபிக்கான கூடுதல் டேட்டா கட்டணம் 39 ரூபாயில் இருந்து 48 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல மற்ற பிளான்களின் விளையும் கணிசமான அளவிற்கு உயர்த்தி VI அதிகாரபூர்வ தள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்