சென்னை கோவையை தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஜி-ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரிசோதனை.!
தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா,
தெலங்கானா மாநிலங்களிலும் G Square நிறுவன அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை
தென் மாநிலங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் கட்டுமானங்களில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி, திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்ட தமிழக பாஜக அண்ணாமலை, ஜீ ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.
வருமான வரித்துறை சோதனை
இந்த நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில்வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை ஆறு மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அண்ணாமலையில் கருத்து பொய்யானவை
இந்த நிலையில், தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா,
தெலங்கானா மாநிலங்களிலும் G Square நிறுவன அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை
பெங்களூரு, மைசூரு, ஐதராபாத்தில் உள்ள G Square அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜி ஸ்கொயர் நிறுவனம், இந்த நிறுவனம் திமுகவினருக்கு சொந்தமானது அல்ல என்றும், அண்ணாமலையின் குற்றசாட்டுகள் பொய்யானவை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது.