சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தற்போது இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என காங்கிரஸ் கட்சி தங்கள் தேர்தல் முக்கிய பிரச்சாரமாக முன்வைத்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி கருத்து ஏதும் கூறாமல் இருந்து வருகிறது.
ஏற்கனவே பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அம்மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார். அதனை சட்டப்பேரவையில் அண்மையில் வெளியிட்டும் விட்டார். இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நலத்திட்டங்களை விரிவுபடுத்த முடியும் என்றும் அவர்கள் தரப்பு கருத்தாக இருக்கிறது. தற்போது ஆந்திரா அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை முன்னிலைப்படுத்தி வருகிறது.
சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கி ஆந்திரா ஐகோர்ட் உத்தரவு!
முன்னதாக கடந்த 15ஆம் தேதி இரண்டு நாள் சோதனையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று முதல் முழு வீச்சில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆந்திர மாநிலம் முழுவதும் துவங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சீனிவாச வேணுகோபால் கிருஷ்ணன் கூறுகையில், ஆந்திராவில் 139 பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உள்ளனர். அவர்களின் திட்டங்களை மேம்படுத்தும் வகையில் இந்த சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பில் உள்ளார்.
பீகாரில் அரசு வருவாய் துறை அதிகாரிகளின் தலைமையின் கீழ் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது, தன்னார்வலர்கள் மற்றும் கிராம ஊழியர்கள் கொண்டு நடத்தப்படுகிறது. இதனால் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய உண்மையான நிலவரங்கள் தெரிய வருமா என்பது அரசியல் பேசுபொருளாக உள்ளது.
இந்தியாவில் 1935க்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நடத்தப்படவில்லை. அதன் பிறகு ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறையும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு SC/ST பிரிவினருக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டும் நடைபெற்று வந்தது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…