கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை… இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!
Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதுவரை 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
Read More – கெஜ்ரிவால் கைது..! வீட்டை சுற்றி 144 தடை.. டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
மேலும், அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை எதுவும் இல்லை என கெஜ்ரிவால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து நேற்று அமலாக்கத்துறையினர் டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி இரவு கெஜ்ரிவாலை கைது செய்தனர்.
Read More – பாஜகவின் செயல் வெட்கக்கேடானது! அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக கண்டனம்
நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களுள் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் கைது என்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரும் பேசுபொருளாக மாறி வருகிறது. பலரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . அந்த வழக்கு விசாரணை இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
Read More – கெஜ்ரிவால் கைது..! வீட்டை சுற்றி 144 தடை.. டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
அதற்குள், தற்போது அமலாக்கத்துறை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அடுத்ததாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அமலாக்கத்துறை விசாரணை காவலில் எடுத்து மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.