ஏப்ரல் 20க்கு பிறகு இவர்கள் எல்லாம் வேலைக்கு செல்லலாம்- மத்திய உள்துறை அமைச்சகம்!
கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகின்ற நிலையில், அது சமூக பரவலாக மாறாமல் இருப்பதற்காக இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், இன்னும் கொரோனா அச்சம் நீங்காத நிலையில், தற்போது பிரதமர் வரும் மே 3 வரை ஊரடங்கை நீட்டிப்பு செய்ததோடு ஏப்ரல் 20க்கு பிறகு சற்று தளர்த்தப்படும் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதிவேலைக்கு செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது.