20ஆம் தேதி முதல் ஆன்லைனில் செல்போன், மின்னணு சாதனங்கள் வாங்கிக்கொள்ளலாம்.!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஏப்ரல் 20ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் கட்டட வேலைகள், எலெக்ட்ரிக்கல், பிளம்பர் ஆகியோர் தங்கள் வேலைகளை செய்யலாம் என சில விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே போல ஆன்லைனில் செல்போன் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை விற்பனை செய்யவும் ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு ஏப்ரல் 20க்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் விநியோகிஸ்தர்கள் அனுமதி வாங்கி குறிப்பிட்ட இடங்களில் விநியோகிக்க முடியும் என்பதால், ஆர்டர் செய்பவர்களுக்கு வந்து சேரும் சரியான தேதி நேரம் உள்ளிட்டவை மாறுபடும் என கூறப்படுகிறது.