இந்திய குடியரசு தின விழாக்களுக்கு 1984 ஆம் ஆண்டு வரை குடியரசு தின விழாக்களில் பயன்படுத்தப்பட்டு வந்த “சாரட் வண்டி” அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்திற்கு பிறகு நிறுத்தப்பட்டது.
இன்று நாட்டின் 75-ஆவது குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். குடியரசு தின விழா டெல்லியில் காலை 10.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, தேசிய போர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு, அணிவகுப்பைக் காண பிரதமர் கடமை பாதைக்கு (கர்தவ்யா) பாதையில் உள்ள மேடைக்கு சென்றார்.
டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
அப்போது ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அணிவகுப்புக்காக பாரம்பரிய “சாரட் வண்டி” ரதத்தில் கடமை (கர்தவ்யா)பாதையில் பயணித்து வந்தனர். இந்த சாரட் வண்டி 40 வருட இடைவெளிக்குப் பிறகு இந்த 75வது குடியரசு தினத்தில் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
டெல்லியில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் குடவோலை முறை!
குடியரசு தின விழாக்களுக்கு 1984 ஆம் ஆண்டு வரை குடியரசு தின விழாக்களில் பயன்படுத்தப்பட்டு வந்த குடியரசுத் “சாரட் வண்டி” அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக இது நிறுத்தப்பட்டது பின்னர் ஜனாதிபதிகள் பயணத்திற்கு லிமோசின்களைப் (சொகுசு வாகனங்கள்) பயன்படுத்தத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…