40 வருடத்திற்கு பிறகு சாரட் வண்டியில் வந்த இந்திய ஜனாதிபதி…!

President Murmu

இந்திய குடியரசு தின விழாக்களுக்கு 1984 ஆம் ஆண்டு வரை குடியரசு தின விழாக்களில் பயன்படுத்தப்பட்டு வந்த “சாரட் வண்டி” அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்திற்கு பிறகு நிறுத்தப்பட்டது.

இன்று நாட்டின் 75-ஆவது குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். குடியரசு தின விழா டெல்லியில் காலை 10.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, தேசிய போர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு, அணிவகுப்பைக் காண பிரதமர் கடமை பாதைக்கு (கர்தவ்யா) பாதையில் உள்ள மேடைக்கு சென்றார்.

டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

அப்போது ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும்  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அணிவகுப்புக்காக பாரம்பரிய “சாரட் வண்டி” ரதத்தில் கடமை  (கர்தவ்யா)பாதையில் பயணித்து வந்தனர். இந்த சாரட் வண்டி 40 வருட இடைவெளிக்குப் பிறகு இந்த  75வது குடியரசு தினத்தில் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

டெல்லியில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் குடவோலை முறை!

குடியரசு தின விழாக்களுக்கு 1984 ஆம் ஆண்டு வரை குடியரசு தின விழாக்களில் பயன்படுத்தப்பட்டு வந்த குடியரசுத் “சாரட் வண்டி” அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக இது நிறுத்தப்பட்டது பின்னர் ஜனாதிபதிகள் பயணத்திற்கு லிமோசின்களைப் (சொகுசு வாகனங்கள்) பயன்படுத்தத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்