1800 மணிநேர மவுனதிற்கு பிறகு மணிப்பூர் கலவரம் பற்றி பிரதமர் மோடி 30 வினாடிகள் பேசினார் என காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்துள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இரு சமூகத்தினர் இடையே உருவான கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்தனர். பலர் தாக்கப்பட்டு அவர்களின் வீடு, கட்டிடங்கள், வழிபாட்டுத்தலங்கள், என பெரும்பாலான பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பலர் அண்டை மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இணையத்தில் நெஞ்சை பதறவைக்கும் ஒரு வீடியோ காட்சி வெளியானது. அதில் இரண்டு பெண்களை ஆடை இன்றி ஒரு கும்பல் இழுத்துச் செல்கிறது. அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் பரவியதிலிருந்து பல்வேறு தரப்பில் இருந்து, ஆளுங்கட்சி உட்பட பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மேலும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பெரும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த கொடூர சம்பவம் குறித்து நேற்று பிரதமர் மோடி தனது கருத்தை பதிவு செய்தார். நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பிரதமர் மோடி செல்வதற்கு முன்பு செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசுகையில் மணிப்பூர் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும், இது நமது இந்திய மக்கள் வெட்கப்பட வேண்டிய சம்பவமாக மாறி உள்ளது என்றும், மணிப்பூர் மகள்களுக்கு நிகழ்ந்துள்ள சம்பவம் மன்னிக்க முடியாத குற்றம் எனவும் இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.
பிரதமரின் இந்த கருத்தை காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது, மணிப்பூர் கலவரம் பற்றி இத்தனை நாட்கள் பேசாமல் இருந்துவிட்டு, இப்போது நிலைமை கைமீறி போனதும் தற்போது பிரதமர் பேசுகிறார். 1800 மணி நேரம் பேசாமல் இருந்து விட்டு தற்போது 30 வினாடிகள் மட்டும் பிரதமர் பேசுகிறார் என விமர்சித்து உள்ளார்.
இது போன்ற குற்றங்கள் எந்த மாநிலத்திலும் நடைபெறாத நிலையில் மற்ற மாநிலங்களையும் அதோடு ஒப்பிட்டு பேசுவது திசை திருப்பும் முயற்சி என்றும் மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும், அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் என்றோ பிரதமர் கூறவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் விமர்சித்து உள்ளார்.
மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் மணிப்பூர் சம்பவம் நடைபெற்று 17 நாட்கள் கழித்து தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. 64 நாட்கள் கழித்து தான் முதல்வர் நடவடிக்கை குறித்து பேசுகிறார் தாமதமான நடவடிக்கை வெறும் வார்த்தைகள் இனி பலனளிக்காது செயல்களில் இருந்து வேகம் காட்ட வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…