15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம், கேரளமும் பேச்சுவார்த்தை ! இரு மாநில முதல்வர்களும் கூட்டாக பேட்டி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கேரளா புறப்பட்டு சென்றார். தற்போது அவர் கேரள முதல்வர் பிரனாய் விஜயன் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூட்டாக பேட்டி அளித்தார்கள்.அப்பொழுது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசுகையில், தண்ணீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினோம் .இரு மாநிலத்தவர்களும் வேறுபாடு இல்லாமல் சகோதரர்களாக உள்ளனர்.
இரு மாநில முதன்மை செயலாளர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூடி நதிநீர் பிரச்சனை தொடர்பாக விவாதிப்பார்கள்.முல்லை பெரியாறில் இருந்து மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பின் தமிழக முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது .பம்பா, அச்சன்கோயில் நதிநீர் பகிர்வு குறித்து குழு முடிவு எடுக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.