‘135 நாட்களுக்கு’ பிறகு ஸ்ரீநகரில் புகழ்பெற்ற ஜூம்மா மசூதி திறப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
  • ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதி 135 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டு தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அசம்பவித ஏதும் நடைபெறாமல் இருக்க காஷ்மீர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வீடுகள் காவலில் வைக்கப்பட்டனர். தொலைபேசி, இணையதளம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் துண்டிக்கப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், குறிப்பாக சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முதல் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதியில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டு மசூதியின் கதவுகள் மூடப்பட்டன. மேலும், பிரிவினைவாத தலைவர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க மசூதியை சுற்றியுள்ள பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இதற்கிடையில், காஷ்மீரில் தற்போது நிலைமை சீரடைந்து வருவதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பல்வேறு மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது மூடப்பட்ட ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதி 135 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. பின்னர் மசூதியில்நேற்று மதிய நேர தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் ஜூம்மா மசூதியில் 135 நாட்களுக்கு பிறகு தொழுகையில் ஈடுபட்டனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

1 hour ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

2 hours ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

2 hours ago

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…

3 hours ago

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

4 hours ago

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

4 hours ago