அஃப்தாப் பூனாவாலா தன்னை வெட்டிக்கொன்று விடுவேன் என மிரட்டியதாக 2020யிலேயே ஷ்ரத்தா வாக்கர் போலீசில் அளித்த புகார் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.
டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் அஃப்தாப் பூனாவாலா என்பவர் தன்னுடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை கொடூரமாக கொலை செய்து, 36 துண்டுகளாக வெட்டி மெஹ்ராலி பகுதியில் உள்ள தனது வீட்டில் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து பிறகு அப்புறப்படுத்தியுள்ளார். கடந்த மே மாதம் இந்த கொலை நடந்துள்ளது.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியிருந்தது. இந்த சம்பவம் முன்பாக 2020யிலேயே தனக்கு ஆபத்து நேரப்போகிறது என்று ஷ்ரத்தா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. ஷ்ரத்தா, நவ-23, 2020 அன்று ஒரு புகாரை மகாராஷ்டிராவில் துலிஞ் போலீசில் தெரிவித்துள்ளார். அந்த புகார்கடிதம் தற்போது ஷ்ரத்தாவின் பக்கத்து வீட்டுக்காரர் வெளியிட்டுள்ளார்.
2020 இல் இந்த புகாரை ஷ்ரத்தா பக்கத்து வீட்டுக்காரர் உடன் சென்று அளித்ததாக அவர் தெரிவித்தார். மகாராஷ்டிரா போலீசும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, இதுவரை போலீசுக்கு புகார் அளிக்கும் தைரியம் தனக்கு இல்லையென்றும், தற்போது அஃப்தாப் தன்னை கொல்ல முயற்சி செய்த பின் இந்த புகார் அளிக்க வந்ததாக கூறியிருக்கிறார்.
அஃப்தாப் தன்னை அடித்து துன்புறுத்தி வருகிறார், மேலும் தன்னை துண்டு துண்டாக வெட்டிக் கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். என்னை அஃப்தாப் அடித்து துன்புறுத்தி வருவது அவர் பெற்றோருக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார். அஃப்தாபும் தானும் தற்போது வரை லிவ்-இன் உறவில் வாழ்ந்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக இருந்தோம் என்று கூறியுள்ளார், ஆனால் எனக்கு அவருடன் சேர்ந்து வாழும் விருப்பமில்லை.
அவர் என்னை எங்கு பார்த்தாலும் கொன்று விடுவதாக மிரட்டி வருகிறார் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…