ஆப்கான் விவகாரம் – நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம் தொடக்கம்!
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.
ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விளக்கமளிக்க இன்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், டெல்லியில் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகாலத் ஜோஷி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்கிறார். ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்து மத்திய அரசு எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்கிறது.