புலம் பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்கு மலிவான வாடகை வீடு – அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், நகர்ப்புற புலம் பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்கு பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மலிவான வாடகை வீடுகளை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.