#Breaking:இந்திய விமானப்படையின் MiG-21 போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்

Default Image

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இரவு 9.10 மணியளவில், IAF MiG 21 பயிற்சி விமானம் பயிற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரியிடம் பேசினார். இந்த சம்பவம் குறித்து IAF தலைவர் அவரிடம் விரிவாக விவரித்ததாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பதிலளித்த இந்திய விமானப்படை ட்விட்டரில், இன்று மாலை 9:10 மணியளவில், IAF MiG 21 பயிற்சி விமானம் ஒரு பயிற்சியின் போது மேற்குத் துறையில் விபத்துக்குள்ளானது. ஆரம்பத்தில், இரண்டு விமானிகளும் படுகாயமடைந்ததாக IAF கூறியது. இருப்பினும், மற்றொரு ட்வீட்டில், விமானப்படையும், இரு விமானிகளின் மரணத்தை உறுதிப்படுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்