பெங்களூரில் ஏரோ இந்தியா நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து 10 கிமீ தூரத்திற்கு இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களுருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை (Yelahanka Air Force) நிலையத்தில் ஏரோ இந்தியா கண்காட்சி நடைபெற உள்ளது. இதனால் கண்காட்சி நடைபெறு இடத்தை சுற்றி 10 கிமீ சுற்றளவில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரோ இந்தியா-2023 நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 17 வரை விமானப்படை நிலையத்தில் நடைபெறும் என்று பெங்களூர் மாநகராட்சி (பிபிஎம்பி) அறிவித்திருந்தது.
இந்த நிகழ்ச்சியின் போது இறைச்சிக்காக வைத்திருக்கும் பறவைகள் நடுவானில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக யெலஹங்கா விமானப்படை நிலையத்திலிருந்து 10 கி.மீ சுற்றளவில் அனைத்து இறைச்சி, கோழி, மீன் கடைகளையும் மூடுவது மற்றும் அசைவ உணவுகளை வழங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் பெங்களூர் சிவில் அமைப்பு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறுவது தண்டனைக்கு வழிவகுக்கும் என்றும் குடிமை அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த தடையை மீறினால் இந்திய விமான விதிகள் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்கப்படும் என்று பிபிஎம்பி தெரிவித்தது.
2021 ஆம் ஆண்டில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நிகழ்ச்சி தடைப்பட்டிருந்தது. இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சிக்கு அதிக அளவில் மக்கள் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான கண்காட்சி ஐந்து நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது. கண்காட்சியின் முதல் மூன்று நாட்கள் நிகழ்ச்சியை முன்பதிவு செய்த பார்வையாளர்களும், இறுதி இரண்டு நாட்களில் பொது மக்கள் விமான கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…