கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் -AEFI அறிக்கை..!

இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து தேசிய நோய்த் தடுப்பு ஆய்வுக்குழு (AEFI) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாக பரவி வருவதால்,தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்காக,கோவாக்சின்,கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக நாடு முழுவதும் பொய்யான கருத்து பரவி வருகிறது என்றும் ஆனால்,இந்தியாவை பொறுத்தவரை ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கசிவு போன்ற பக்கவிளைவுகள் மிகவும் அரிதாகவே நிகழ்கிறது என்றும் திங்களன்று தேசிய நோய்த் தடுப்பு ஆய்வுக்குழு (AEFI),அறிக்கை ஒன்றை மத்திய சுகாதார அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது.
அந்த அறிக்கையில்,இந்தியாவில் உள்ள 753 மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் 0.61 சதவிகிதம் பேருக்கு மட்டுமே பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.அதாவது, 10 லட்சம் பேரில் 6100 பேர் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக,இந்தியாவில்,கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை எனவும்,
ஆனால்,கோவிஷீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே ரத்தம் உறைதல்,ரத்தக் கசிவு போன்ற பக்கவிளைவுகள் மிகவும் அரிதாகவே ஏற்பட்டிருப்பதாகவும் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இருப்பினும்,கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பு,
- மூச்சுத் திணறல்,
- மார்பில் வலி,
- கைகால்களில் வீக்கம்,
- ஊசி போட்ட இடத்திற்கு அருகில் உள்ள பகுதியில் தோல் காயங்கள்,
- வாந்தியெடுத்தல்,
- தொடர்ந்து வயிற்று வலி,
- கடுமையான மற்றும் தொடர்ச்சியான தலைவலி,
- மங்கலான பார்வை அல்லது கண்களில் வலி,
- உடல்சோர்வு
அல்லது வேறு எந்த அறிகுறி ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsPAK: சரவெடியாய் வெடித்த விராட் கோலி வரலாற்று சாதனை! சச்சின் சாதனை முறியடிப்பு.!
February 24, 2025
தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறப்பு… விலை எவ்வளவு தெரியுமா?
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி : முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்! இந்தியா அபார வெற்றி…
February 24, 2025
INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…
February 23, 2025