காஷ்மீரில் இருந்து அமர்நாத் யாத்ரீகர்கள் வெளியேற அறிவுரை!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கு நாடு முழுவதும் உள்ள யாத்தீரிகர்கள் வருகின்றனர்.
இந்த ஆண்டு யாத்திரைக்கான தொடக்கம் ஜூன் 30-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி வரை அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் அமர்நாத் யாத்திரையில் ஈடுபட்டு உள்ள யாத்தீரிகர்கள் உடனடியாக சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என காஷ்மீர் அரசு கூறியுள்ளது.
அமர்நாத் யாத்திரையில் ஈடுபட்டு உள்ள யாத்தீரிகர்கள் மீது பயங்ரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக உளவுதுறை கூறியுள்ளனர்.மேலும் கடந்த சில நாள்களாக எல்லை பகுதியில் பாகிஸ்தான் பயங்ரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதனால் காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.
இன்னும் சில நாள்களில் சுதந்திர தினம் வருவதால் அதை கருத்தில் கொண்டு காஷ்மீரில் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.