இந்திய கடற்படை நடத்திய ’சூப்பர்சோனிக் குரூஸ்’ ஏவுகணை பரிசோதனை வெற்றி

இந்திய கடற்படை உள்நாட்டிலேயே தயாரித்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த சோதனையை இந்திய கடற்படை நடத்தியது.
இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளரின் அதிகாரபூர்வ ‘X’ பக்கத்தில் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய கடற்படை மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இணைந்து உள்நாட்டில் தயாரித்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை, இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சோதனையை இன்று வெற்றிகரமாக மேற்கொண்டது.
குடியரசு தினம் 2024: அணிவகுப்புக்கான நேரம் முதல் சிறப்பு விருந்தினர் வரை முழு விவரங்கள்!
ஏவுகணை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கப்பல்களில் இருந்து இந்த சோதனையானது நடத்தப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்திய கடற்படை, பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை சோதனையை சுகோய் போர் விமானத்தில் இருந்து மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025