பெண் ஒருவர் தனது தானே கருக்கலைப்பு செய்ய முயன்றதால் அவரது உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் 25 வயதான பெண் ஒருவர் தனது கருவை கருக்கலைப்பு செய்ய முயன்றதால் அவரது உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், அந்த பெண்ணின் ஆண் நண்பர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி 2016 ஆம் ஆண்டு முதல் பல முறை இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.
இதனால், அந்த பெண் கர்ப்பம் தரித்துள்ளார். இதுபற்றி ஆண் நண்பரிடம் அப்பெண் தெரிவித்துள்ளார். அப்போது, கருவை கலைத்துவிடும்படியும், மருத்துவமனைக்கு சென்றால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் ரகசியமாக கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்து, அவரது ஆண் நண்பர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கருவை கலைக்கும்படி பெண்ணிடம் கூறியுள்ளார்.
தனக்கு தானே கருக்கலைப்பு செய்ய முயன்றபோது, அந்த பெண்ணின் உடல் நிலை மேசமானதால், அப்பெண்ணை அவரின் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருடைய ஆண் நண்பர் யார் என்றும் விசாரித்து சோயுப்கான் (வயது 31) என்பவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…