அனுமதி இலவசம்.! அனைவரும் தாஜ்மஹால் பார்க்க வாங்க… தொல்லியல் துறை சூப்பர் அறிவிப்பு.!
தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கு இன்று இலவச நுழைவு அனுமதிக்கப்படுகிறது.
உலக பாரம்பரிய வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அனைத்து தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் இலவச நுழைவைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 19 ஆம் தேதி தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கு இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலவச நுழைவைப் பெறுவார்கள் என்று கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் (ஆக்ரா வட்டம்) ராஜ் குமார் படேல் தெரிவித்துள்ளார்.
தாஜ்மஹாலின் நுழைவு இலவசம், ஆனால் நினைவுச்சின்னத்தின் உள்ளே இருக்கும் முக்கிய கல்லறையைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் 200 ரூபாய் டிக்கெட் வாங்க வேண்டும்,” என்று அவர் கூறினார். படேல் மேலும் கூறுகையில், “உலக பாரம்பரிய வாரம் முழுவதும், நினைவுச்சின்னங்களில் பொது கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
இதே போல் தமிழகத்திலும் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில், பொதுமக்களுக்கு காலை 10 முதல் மாலை 6 மணி வரை இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.