லட்சத்தீவில் கொண்டுவரப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக, இரண்டு வாரத்திற்குள், மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என கேரள உத்தரவிட்டுள்ளது.
சுற்றுலாவுக்கு பெயர் போன ஒரு இடம் லட்சத்தீவு. இந்த லட்சத்தீவில் மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் அங்கு வாழும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து, அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. நாட்டின் மிகச் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவு தினேஷ்வர் சர்மா என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு காலமானார்.
இதனையடுத்து, தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ யூனியன் பிரதேசத்தின் நிர்வாக உள்ள பிரபுல் கோடா படேல் லட்சத்தீவின் பொறுப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். இவர் கொண்டு வந்துள்ள பல சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியல் பிரபலங்கள் பாலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், லட்சத்தீவு நிர்வாகியின் நிர்வாக சீர்த்திருத்தங்களை எதிர்த்து மலப்புரத்தை சேர்ந்த கே.பி நவ்சாத் அலி மற்றும் கேரள மாநில காங்கிரஸ கட்சி செயலாளர் காவரட்டியைச் சேர்ந்த முகமது சாதிக் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், வரைவு ஒழுங்கு முறையை அமல்படுத்துவது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை லட்சத்தீவு மேம்பாட்டு ஆணையம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள பல நிர்வாக சீர்திருத்தங்கள் தீவில் வாழும் மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கொண்டுவரப்பட உள்ளதாகவும், நிலப் பயன்பாடு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வரைவு சட்ட விதிகள், சட்டவிரோதமான கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கம் கொண்டவை என்றும் சுட்டிக் காட்டியிருந்தனர்.
இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் இரண்டு வாரத்திற்குள், இதுதொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…