5-ம் தேதி வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு.!
ராகுல் விவகாரத்தில் இன்றும் கடும் அமளி நீடித்ததால் 14வது நாளாக முடக்கம்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி தகுதி நீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா கடந்த மார்ச் 29 அன்று இன்று கால 11 மணிக்கு தொடங்கும் என ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நான்கு நாள் இடைவேளைக்குப் பிறகு, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய, 3 நிமிடங்களிலேயே எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளும் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், 2 மணிக்கு தொடங்கிய நாடாளுமன்ற இரு அவைகளிலும் வழக்கம் போல், தகுதிநீக்க நடவடிக்கையை கண்டித்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கமிட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் ஏப்ரல் 5-ம் தேதி காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாளை மகாவீரர் ஜெயந்தி என்பதால், நாளை மறுநாள் காலை வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்றும் ராகுல் விவகாரத்தில் அமளி நீடித்ததால் 14வது நாளாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.