நாடாளுமன்ற இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு.!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி தகுதி நீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா கடந்த 3-ம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளும் ஏப்ரல் 5-ம் தேதி (அதாவது) இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.
அதன்படி, இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. அதாவது, அதானி பங்குச்சந்தை முறைகேடு புகாரில் கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள், கருப்பு சட்டை அணிந்து வந்து சபாநாயகர்கள் மேஜை முன்பு, நின்று முழக்கமிட்டதன் காரணமாக நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியதுமே, இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் தொடங்கியதில் இருந்தே, இரு அவைகளும் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் அதானி பங்குச்சந்தை முறைகேடு புகாரில் கூட்டுக்குழு விசாரணை கோரி வலியுறுத்தியும், இங்கிலாந்தில் பேசிய ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு ஆளும் கட்சி பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.