3 நிமிடங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு.!
நாடாளுமன்றத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய 3 நிமிடங்களில் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி தகுதி நீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா கடந்த மார்ச் 29 அன்று இன்று கால 11 மணிக்கு தொடங்கும் என ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி, நான்கு நாள் இடைவேளைக்குப் பிறகு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கியது.
இரு அவைகளும் தொடங்கிய 3 நிமிடங்களிலேயே எதிர்க்கட்சியினர், ராகுல் தகுதி நீக்கம், அதானி விவகாரங்கள் தொடர்பாக அமளியில் ஈடுபட, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் கட்சி பாஜகவும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், இரு அவைகளும் தொடங்கிய பின்னர், எம்.பி கிரிஷ் பாபட், முன்னாள் எம்.பி இன்னசென்ட் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்தனர். புனேயில் இருந்து பாஜக எம்பியாக இருந்த கிரிஷ் பாபட் மார்ச் 29 அன்று காலமானார். மேலும், திருச்சூரில் உள்ள சாலக்குடி தொகுதியின் முன்னாள் சுயேச்சை எம்பி இன்னசென்ட் மார்ச் 26 அன்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.