இரு அவைகளும் ஒத்திவைப்பு..! நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாளையும் தொடரும் என அறிவிப்பு..!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். மேலும் , நாடாளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர்.
மேற்கண்ட கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்
இதன் மீதான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், இரு அவையும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.