ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என்று இஸ்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
ஆதித்யா-எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஆதித்யா-எல்1 விண்கலம் தனது இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது. இந்த விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் 16 நாட்கள் இருக்கும்.
இந்த 16 நாட்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதை மெதுவாக அதிகரிக்கப்பட்டு, பூமியின் ஈர்ப்பு விசை பகுதியை ஆதித்யா எல்-1 கடக்கும். ஆதித்யா-எல்1 மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. சோலார் பேனல்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.
அதன்படி, இன்று (3.09.2023) ஆதித்யா எல்1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது எனவும், அடுத்தக்கட்டமாக செப்டம்பர் 5ம் தேதி விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயரம் உயர்த்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவலின் படி, ஆதித்யா எல் 1 விண்கலம் ஆரோக்கியமாக உள்ளது மற்றும் பெயரளவில் செயல்படுகிறது. இப்பொது, அதன் முதல்கட்ட சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது என்றும், புதிய சுற்றுப்பாதை 245 கிமீ x 22459 கிமீ ஆகும். அடுத்த செயல்பாடு, செப்டம்பர் 5, 2023 அன்று மதியம் 03:00 மணி அளவில் திட்டமிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, “ஆதித்யா-எல்1 மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. சோலார் பேனல்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான முதல் கட்டப்பணி செப்டம்பர் 3, 2023 அன்று சுமார் 11:45 மணி நேரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு திட்டமும் முடிவடைவதற்கு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த லாக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தவுடன் ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள ஏழு பேலோடுகளும் செயல்படத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…