இந்தியா

AdityaL1 : ஆதித்யா விண்கலத்தின் புதிய பயணம்..! இஸ்ரோ அறிவிப்பு..!

Published by
லீனா

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

இலக்கை நோக்கி பயணம்:

அதன்பிறகு, ஆதித்யா-எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஆதித்யா-எல்1 விண்கலம் தனது இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது. இந்த விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் 16 நாட்கள் இருக்கும். அதன்படி, செப்டம்பர் 2ல் அனுப்பப்பட்ட விண்கலம் 16 நாட்களாக பூமி சுற்று வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.

சுற்றுவட்டப்பாதை அதிகரிப்பு:

இதன்பிறகு, கடந்த செப்-3ம் தேதி ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல் கட்ட புவி சுற்று வட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து, செப்டம்பர் 5ம் தேதி இரண்டாம் கட்டமாக புவி சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் ஆதித்யா-எல்1 மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏற்கனவே தொடங்கிவிட்டது.

சோலார் பேனல்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. மேலும், செப்டம்பர் 10 ம் தேதி மூன்றாம் கட்ட சுற்றுவட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது. தொடர்ந்து செப்-15ம் தேதி 4ம் கட்டமாக 256 கிமீ x 1,21,973 கி.மீ தூரத்திற்கு ஆதித்யா எல்1 விண்கலம் உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த சுற்றுவட்டப்பாதை அதிகரிப்பு நாளை (செப்டம்பர் 19ம் தேதி) அதிகாலை 2 மணி அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பிறகு பூமியின் ஈர்ப்பு விசை பகுதியை ஆதித்யா எல்-1 கடக்கும்.

அறிவியல் தரவுகள் சேகரிப்பு:

இந்த நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலம் ஆய்வு பணியைத் தொடங்கியுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா-எல்1 விண்கலம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இஸ்ரோ, “ஆதித்யா-எல்1 அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளது. STEPS கருவியின் சென்சார்கள் பூமியில் இருந்து 50,000 கிமீ தொலைவில் உள்ள அதிவெப்ப மற்றும் ஆற்றல் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிடத் தொடங்கியுள்ளன. இந்தத் தரவு விஞ்ஞானிகள் பூமியைச் சுற்றியுள்ள துகள்களின் நடத்தையை ஆய்வு செய்ய உதவுகிறது. அலகுகளில் ஒன்றால் சேகரிக்கப்பட்ட ஆற்றல் துகள் சூழலில் உள்ள மாறுபாடுகளை படம் காட்டுகிறது.” என்று தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து பிரிந்து சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி எல்1-ஐ நோக்கி ஆதித்யா விண்கலம் தனது பயணத்தை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. ஆதித்யா எல்1 விண்கலம் 110 நாட்களில் எல்1 புள்ளியின் சுற்றுவட்டப் பாதையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

இன்று இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலம்! கைவசமுள்ள இருப்புத் தொகை எவ்வளவு?

ஜெட்டா :  ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…

15 minutes ago

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

49 minutes ago

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

1 hour ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

2 hours ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

3 hours ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

3 hours ago