Aditya L1: ஆதித்யா எல்-1 பணி மிகவும் முக்கியமானது.! இஸ்ரோவின் முன்னாள் தலைவர்.!

Anil Bharadwaj

இஸ்ரோ விஞ்ஞானிகள் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை உருவாக்கி, விண்ணில் செலுத்தவுள்ளனர். அதன்படி, ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து இன்று காலை 11:50 மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளனர்.

தற்போது, விண்கலத்தை செலுத்துவதற்கான 24 மணிநேர கவுன்ட் டவுன் நேற்று தொடங்கப்பட்ட நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலத்தை அனுப்ப விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ஆதித்யா எல்1 பணி, இந்தியாவிடமிருந்து மிகவும் தனித்துவமான பணி என்று இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர்.அனில் பரத்வாஜ் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, நாங்கள் அனைவரும் இந்த ஏவுதலைப் பற்றி மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இது இந்தியாவிடமிருந்து மிகவும் தனித்துவமான பணியாகும். ஆதித்யா எல்1 இல் இருக்கும் அனைத்து சோதனைகளும் செயல்பட ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் ஆகலாம். அதன்பிறகு, நாம் தொடர்ந்து சூரியனைக் கண்காணிக்கத் தொடங்கலாம்.” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்