Aditya L-1: சூரியனை நோக்கி விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1.! இஸ்ரோ குழுவிற்கு காங்கிரஸ் வாழ்த்து.!

congress

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 என்ற விண்கலமானது இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, 14 நாள் ஆயுட்காலம் என்ற அளவில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தங்களது அடுத்த திட்டமான சூரியனை ஆய்வு செய்யும் பணிக்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து இன்று காலை 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி.- சி57 ராக்கெட் மூலம் “ஆதித்யா எல்-1” என்ற விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் புவியின் தாழ்வு வட்டப்பாதையை சென்றடைவதற்கு 72 நிமிடங்கள் (1 மணி நேரம் 12 நிமிடங்கள்) ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூரியனை நோக்கிய பயணத்தை ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக தொடங்கியதாக, இஸ்ரோ குழுவினருக்கு காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.

அந்த செய்தியில், ” இஸ்ரோ நாடு பெருமை கொள்ளும் வகையில் பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சந்திரயான்-3க்குப் பிறகு, ஆதித்யா எல்-1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவுவதன் மூலம் இஸ்ரோ மீண்டும் நாட்டின் மதிப்பை உயர்த்தியுள்ளது. நாட்டின் விஞ்ஞானிகளின் இந்த வரலாறு காணாத சாதனையால் ஒட்டுமொத்த காங்கிரஸ் குடும்பமும் பெருமிதம் கொள்கிறது. முழு இஸ்ரோ குழுவிற்கும் வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்