ஆதிதிராவிட மணமகள் நிதியுதவி திட்டம் ரூ.75,000 லிருந்து ரூ.1,00,000 ஆக உயர்வு – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் ஆதி திராவிட மணமகள் நிதியுதவி திட்டம் உயர்த்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.
புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 2021-2022-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். முதல்வர் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இதில், குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தில் ஆதி திராவிட மணமகள் நிதியுதவி திட்டம் ரூ.75,000 இருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாட்கோவில் மாணவர்கள் பெறப்பட்ட கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட 9,924 கோடி பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.