இவர்கள் தான் புதிய தேர்தல் ஆணையர்கள்… ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் குற்றச்சாட்டு!
Election Commissioners : ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் திடீரென இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இருந்து அனூப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகிய 2 பேரும் தேர்தல் ஆணையாளர்கள் பதவியில் இருந்து விலகினார்.
Read More – ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியம்.! குடியரசு தலைவரிடம் அறிக்கை தாக்கல்.!
இதன் காரணமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில், இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கான பணியிடங்கள் காலியாகி உள்ளது. இந்த சூழல் தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேர்தல் ஆணையர்கள் தேர்வு கூட்டம் ஒருதலைபட்சமாக நடந்ததாக கூட்டத்தில் பங்கேற்ற பின் அதிரஞ்சன் சவுத்ரி குற்றசாட்டியுள்ளார்.
Read More – குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் இல்லை.. அமித்ஷா அதிரடி.!
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது, தேர்தல் ஆணையர் பதிவுகளுக்கு பட்டியலிடப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் தனக்கு முன்கூட்டியே கிடைக்கவில்லை. இரண்டு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுப்பதற்கான குழுவின் கூட்டத்தில் 6 பெயர்கள் வந்ததாகவும், அதில் சுக்பீர் சந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோரின் பெயர்கள் உயர்மட்ட உறுப்பினர்களால் இறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார்.
எனவே, இந்திய தலைமை நீதிபதி தேர்வுக் குழுவின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்றும், சட்ட அமைச்சர் தலைமையிலான தேடல் குழுவின் முன் வந்ததாகக் கூறப்படும் 200க்கும் மேற்பட்ட வேட்பாளர்களிடமிருந்து, 6 பெயர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டன என்பது குறித்து தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.
Read More – ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய 18 OTT தளங்கள் முடக்கம்!
மேலும், முழுமையான விவரங்கள் இல்லாமல் அவசரகதியில் தேர்வு கூட்டம் நடத்தப்பட்டது என குற்றசாட்டினார். இதனிடையே, கேரளாவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ் குமார்மத்திய அரசின் கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்தவர். இதுபோன்று, பஞ்சாப் மாநில ஐஏஎஸ் அதிகாரியான சாந்து உத்தராகண்ட் தலைமை செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.